ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு:- 9-வது ஐ.சி.சி.... ... சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
Daily Thanthi 2025-03-04 08:37:32.0
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு:- 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது. 

1 More update

Next Story