24 மணி நேரத்தில் வெளியேறுங்கள் - வடக்கு காசாவில்... ... இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்
x
Daily Thanthi 2023-10-13 04:18:38.0

24 மணி நேரத்தில் வெளியேறுங்கள் - வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள மக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் 11 லட்சம் பாலஸ்தீனர்கள் தெற்கு பகுதிக்கு செல்வது சாத்தியமற்றது. மேலும், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.  


Next Story