வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு... ... தமிழக வேளாண் பட்ஜெட்: ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்
Daily Thanthi 2025-03-15 05:41:08.0
t-max-icont-min-icon

வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும். ரூ 15 இலட்சத்தில் நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும்.

ரூ.1.35 கோடியில் காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும். ரூ.6.16 கோடியில் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும். ரூ.1 கோடியில் வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான " "டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்



1 More update

Next Story