தமிழகத்தில் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள்... ... தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
x
Daily Thanthi 2024-12-09 05:49:49.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன - அமைச்சர் செந்தில் பாலாஜி


அம்பத்தூர் எம்.எல்.ஏ கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருக்கின்றன. இவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், அம்பத்தூர் தொகுதியும் உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து 150 மின் மாற்றிகளை மாற்றுவது குறித்து அ.தி.மு.க.வின் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளன. மதுரை திருமங்கலம் தொகுதியிலும் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மேலும் திருப்போரூர் கோவளத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

1 More update

Next Story