டங்ஸ்டன் சுரங்கம்: 10 மாத காலம் என்ன... ... தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
x
Daily Thanthi 2024-12-09 07:17:23.0
t-max-icont-min-icon

டங்ஸ்டன் சுரங்கம்: 10 மாத காலம் என்ன செய்தீர்கள்.. - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி


சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “மாநில உரிமைகள் பறிபோகும்போதே நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஏன் உரிய அழுத்தம் தரவில்லை..? . தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்தவில்லை என சுரங்க அமைச்சகம் கூறியுள்ளது.

சுரங்கம் தொடர்பாக பிரமருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்களை தீர்மானத்தில் தெரிவிக்கப்படவில்லை. மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் 10 மாதமாக தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே டங்ஸ்டனுக்கு ஏற்கனவே எதிர்ப்பை பதிவு செய்தோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு அவை முன்னவர் துரை முருகன் பதிலளித்து வருகிறார். தற்போது இதுதொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. 

1 More update

Next Story