“நானும் ரெளடி தான்” வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு - வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சென்னை,
இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறியுள்ளார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
‘நானும் ரவுடி தான்’ படம் 2015 ஆண்டு அக்டோபர் 21ம் தேதி அன்று வெளியானது. மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்தப்படம் அமைந்தது. தனுஷின் ஒன்டர்பார் பிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டு, லைகா ப்ரொடக்ஷன்ஸ் விநியோகித்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நானும் ரவுடி தான்’ படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் “இன்றுடன் ‘நானும் ரெளடி தான்’ படம் வெளியாலி பத்து வருடங்கள் ஆகி விட்டது. ... நிறைய அற்புதங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை இந்த அழகான நாளிலிருந்து தொடங்கியது. காலம் எவ்வளவு அழகாக அதன் இசையை வாசித்துள்ளது....இந்த நாளை நான் மிகவும் வித்தியாசமாகக் கனவு கண்டேன்.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் உங்கள் எல்லா இதயங்களையும் அடைந்திருக்கும் நாள், உங்கள் புன்னகை, உங்கள் வார்த்தைகள், உங்கள் அன்பு, இந்த நாளை எனக்கு இன்னும் சிறப்பானதாக்கியிருக்கும். எங்கோ ஆழமாக,அந்த தருணத்திற்காக நான் என் மகிழ்ச்சியைச் சேமித்து வைத்திருந்தேன். ஆனால் வாழ்க்கை, அதன் அமைதியான ஞானத்தில், இன்று எனக்கு மிகவும் அழகான ஒன்றைக் கற்றுக் கொடுத்தது."பெரிய தருணம்" இல்லாவிட்டாலும், நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன் - உண்மையிலேயே, அமைதியாக.நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் என்று நினைத்து நாம் மைல்கற்களை துரத்துகிறோம்.ஆனால் மகிழ்ச்சி அவ்வளவு கடினமான இலக்கு அல்ல! உங்களை பிஸியாக வைத்திருந்த மற்ற எல்லாவற்றிலிருந்தும் ஒரு மென்மையான இடைநிறுத்தமாக இது இருக்கலாம்!
உங்கள் அன்பான மனைவியிடமிருந்து ஒரு அன்பான அரவணைப்பு.. முத்தம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருக்கும் ஆழமான அன்பை உறுதி செய்கிறது! உங்கள் கண்களை நேராகப் பார்த்து, உள்ளே மறைந்திருக்கும் வலியைப் பற்றி எதுவும் தெரியாமல் உங்கள் குழந்தைகளின் அப்பாவி சிரிப்பு! உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நிபந்தனையற்ற அன்பு, நீங்கள் கேட்கவும் நன்றாக உணரவும் விரும்பும் இனிமையான விஷயங்களைச் சொல்வது. இவை அனைத்தும் நம் மகிழ்ச்சியை நாம் சேமித்து வைக்கும் பெரிய வெற்றிகளைப் போலவே நல்லது.
மகிழ்ச்சியாக இருக்க நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் "வெற்றி" பெற வேண்டியதில்லை. உங்களைச் சுற்றியுள்ள அனைத்து சிறிய, இனிமையான சீர்வாதங்களுடனும் இருப்பது...போதுமானது. சில நேரங்களில் கனவுகள் வேறு பாதையில் செல்கின்றன. ஆனால் கடவுள், எப்போதும், எப்போதும், தனது சொந்த அமைதியான வழியில்,உங்களை சிரிக்க வைக்க ஒரு முறையை, ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கண்டுபிடிப்பார். மகிழ்ச்சியான இதயத்துடனும் நேர்மறை ஆற்றலுடனும் ஆவலுடன் காத்திருங்கள். நல்லது நடக்கும் என்று நம்புவோம். நம்புங்கள் .... வாழ்க்கை அழகானது .கடவுள் பெரியவர்.” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தை இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.






