நடிகை ஷில்பா ஷெட்டியின் கேளிக்கை விடுதியில் தொழிலதிபர் ரகளை


நடிகை ஷில்பா ஷெட்டியின் கேளிக்கை விடுதியில் தொழிலதிபர் ரகளை
x

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான கேளிக்கை விடுதி ஊழியர்களுடன், தொழில் அதிபர், நண்பர்கள் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு டிரினிட்டி சர்க்கிள் செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பாஸ்டியன் பப் என்ற கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதி பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமானது ஆகும். இந்த நிலையில் இந்த கேளிக்கை விடுதிக்கு கடந்த 11-ந்தேதி நள்ளிரவில் கர்நாடக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும், தொழில் அதிபருமான சத்யா நாயுடு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் கட்டண ரசீதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள், கேளிக்கை விடுதி ஊழியர்களிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ரகளையிலும் ஈடுபட்டதுடன் ஊழியர்களை தாக்க முயன்றனர்.

அதன்பின்னர் சத்யா நாயுடுவும், அவரது நண்பர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சத்யா நாயுடு, அவரது நண்பர்கள் மற்றும் கேளிக்கை விடுதி ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

1 More update

Next Story