'ஜன நாயகன்' படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்


ஜன நாயகன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
x

‘ஜன நாயகன்’ விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9ம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் 'ஜன நாயகன்' படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதாவது, 'தி கோட்' படத்தை தொடர்ந்து 'ஜன நாயகன்' படத்தின் வெளியீட்டு உரிமையையும் பிரபல நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story