திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? - ரஜினி சொன்ன பதில்


A pepople gathering for film actors..Will it become a vote?
x

கோவை சென்றிருக்கும் ரஜினிகாந்த், திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்றார். புறப்படுவதற்கு முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ள படம் பற்றிய அப்டேட்டை தெரிவித்தார்.

கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை என்றும் ஆனால், இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.

இப்போது ரஜினி கோவை சென்றிருக்கிறார். அப்போது ரஜினிகாந்திடம், திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி, நோ கமெண்ட்ஸ் என்று கூறி சென்றார்.

மேலும், ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக பாலக்காடு செல்வதாகவும், அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் கூறினார்.

1 More update

Next Story