தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் அஜித்


தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் அஜித்
x
தினத்தந்தி 17 Jan 2025 5:16 PM IST (Updated: 17 Jan 2025 5:36 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற்ற கார் பந்தய போட்டியை நடத்திய தமிழக அரசிற்கு அஜித் பாராட்டும் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

துபாயில் நடந்த 24ஹெச் கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேசிங்' அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முன்னதாக 'அஜித்குமார் ரேஸிங்' அணியை தொடங்கிய பின்பு கார் ரேஸிற்காக பயிற்சி எடுத்து வந்தார். அப்போது அவரது ஹெல்மெட் மற்றும் அவரது அணியின் காரில் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை லோகோ இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட சில அமைச்சர்கள் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் 24ஹெச் போட்டிக்கு பின் அஜித் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கு ஒரு பேட்டியில் பேசிய அவர், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போட்ஸுக்கு நிறைய விஷயங்கள் செய்கிறது. சென்னையில் முதல் முறையாக கார் ரேஸ் இரவு நேரத்தில் நடத்தியது. அதற்காக தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் என்னுடைய நன்றி. இந்த முன்னெடுப்பு எங்கள் நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல உதவும்" என்றார்.

1 More update

Next Story