சிறையில் படுக்கை, தலையணை கேட்ட நடிகர் தர்ஷன்- கோர்ட்டு போட்ட உத்தரவு


சிறையில் படுக்கை, தலையணை கேட்ட நடிகர் தர்ஷன்- கோர்ட்டு போட்ட உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2025 4:30 AM IST (Updated: 30 Oct 2025 4:31 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் வேறு அறைக்கு மாற்றக் கோரி நடிகர் தர்ஷன் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தனக்கு படுக்கை, தலையணை, ஆடைகள், சிறையில் வேறு அறைக்கு மாற்றக் கோரி நடிகர் தர்ஷன் சார்பில் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டும், சிறைக்கு சென்று நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக சட்ட சேவை ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சட்ட சேவை ஆணைய நீதிபதி வரதராஜ், சிறைக்கு சென்று ஆய்வு நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். பின்னர் அந்த மனு மீது அரசு மற்றும் தர்ஷன் தரப்பில் தொடர் வாதங்கள் நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை தொடர்ந்து அக்டோபர் 29-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, நடிகர் தர்ஷன் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது சிறையில் தர்ஷனுக்கு தலையணை, படுக்கை வழங்க சிறை விதிமுறை களின்படி அவகாசம் இல்லாததால், அதனை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தர்ஷனுக்கு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் ஆடைகள் வழங்கவும் சிறை நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போதுள்ள அறையில் இருந்து சிறையில் வேறு அறைக்கு மாற்றுவது குறித்து சிறை நிர்வாகமே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story