ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் தர்ஷன் கணேசன்


ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் தர்ஷன் கணேசன்
x

சிவாஜியின் பேரன் தர்ஷன் ‘லெனின் பாண்டியன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், 'ஜூனியர் சிவாஜி' என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தநிலையில் ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார்.

இவர் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆடு மேய்க்கும் ஒரு பெரியவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்பு தரும் கதை. பெரியவராக கங்கை அமரனும், போலீஸ்காரராக தர்ஷன் கணேசனும் நடிக்கிறார்கள். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், ‘லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் சிவாஜியின் பேரன் தர்ஷன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றார். அவருடன் பட தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் மற்றும் ராம்குமார் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.



1 More update

Next Story