நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்


நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
x

நடிகர் டெல்லி கணேஷ் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சென்னை,

பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார். சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story