நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் ‘திடீர்’ அனுமதி

பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா (வயது 89) மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
மும்பை,
பாலிவுட் திரை உலகில் பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா (வயது 89) மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவல் திரை உலகில் காட்டுத்தீ போல பரவியது. அவரது உடல்நிலை குறித்து சோசியல் மீடியாவில் பல்வேறு யூகங்கள் பரவி வருகிறது. இது குறித்து அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறும் போது, ‘தர்மேந்திரா வயது முதிர்வு காரணமாக அவரது வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். கவலைப்பட ஒன்றுமில்லை’ என தெரிவித்தனர்.
தர்மேந்திராவின் 2-வது மனைவி ஹேமாமாலினி. தர்மேந்திராவின் மகன்கள் சன்னிதியோல், பாபி தியோல், மகள் ஈஷா தியோல் ஆகியோர் திரை உலகில் பிரபலமாக இருக்கின்றனர்.
Related Tags :
Next Story






