அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் சிவராஜ்குமார்

சிவராஜ்குமாருக்கு கடந்த மாதம் 24-ம் தேதி அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடந்தது.
பெங்களூரு,
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவர் 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாண' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தற்போதுவரை 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 'ஜெயிலர்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு (62) புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சிவராஜ்குமார் சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவருக்கு கடந்த மாதம் 24-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்த பித்தப்பை அகற்றப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து நடிகர் சிவராஜ்குமார் பெங்களூரு திரும்பி இருக்கிறார். நேற்று சிவ ராஜ்குமாரை அவரது வீட்டிற்குச் சென்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story






