நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் கேரள அரசு


நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் கேரள அரசு
x

நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு விடுதலை செய்தது.

சென்னை,

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்ற போது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை வீடியோவாக பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கேரள போலீசார் விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு விடுதலை செய்தது.

இந்த நிலையில், நடிகை மீது நடந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரள அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநில சட்ட அமைச்சர் பி.ராஜீவ் கூறியதாவது: “இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்டவருக்கு(நடிகை) முழுமையான நீதி கிடைக்கவில்லை. நேரடியாக குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இது அனைவரும் எதிர்பார்த்த தீர்ப்பு அல்ல. அந்த நடிகைக்கு தொடர்ந்து அரசு எப்போதும் உறுதியாக நிற்கும். தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது’ என்றார்.

1 More update

Next Story