உடல் எடை குறைத்த ரகசியத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் 28-ம் தேதி வெளியாகிறது.
உடல் எடை குறைத்த ரகசியத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்
Published on

நடிகை கீர்த்தி சுரேஷ், சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவரும் கீர்த்தி சுரேஷ், அதில் தன் உடல் எடை குறைப்பு குறித்து பேசியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ், கடந்த 12 மாதங்களில் சுமார் 8 முதல் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்திருந்தார். இதுபற்றிய தனது பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ், என் 18 வயது வரை நான் உடற்பயிற்சியே செய்ததில்லை. சினிமாவிற்கு வந்த பிறகு வேலை, தூக்கம், சாப்பாடு ஆகிய மூன்று மட்டுமே என் வாழ்க்கையாகிவிட்டது. அந்த சமயத்தில்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன். சரும பராமரிப்புக்குக் கூட கடந்த 4, 5 வருடங்களாகத்தான் எல்லாம் செய்து வருகிறேன்.

முதலில் நான் செய்தது கார்டியோ மட்டும்தான். தீவிரமாக கார்டியோ செய்ததில், தசை இழப்பு ஏற்பட்டு மிகவும் ஒல்லியாகி விட்டேன். மற்றபடி குறுகிய கால டயட் எதையும் நான் பின்பற்றவில்லை. புரதம் அதிகம் நிறைந்த உணவுகளையும், கார்ப்ஸ் குறைந்த உணவுகளையும் அதிகம் உட்கொண்டேன். இப்போதும் அதையே பின்பற்றுகிறேன்.

யோகா எனக்கு மிகவும் பலன் கொடுத்தது. தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். இப்போது நான் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன்.நான் உணவில் கட்டுப்பாடுகள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. தோசைதான் என்னுடைய பேவரைட். ஆனால் அதேநேரம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவேன். மற்றபடி டயட் எதுவும் பின்பற்றுவதில்லை என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com