அமெரிக்காவில் பிரபல டைரக்டருடன் சுற்றி வரும் நடிகை சமந்தா


அமெரிக்காவில் பிரபல டைரக்டருடன் சுற்றி வரும் நடிகை சமந்தா
x
தினத்தந்தி 10 July 2025 9:45 PM IST (Updated: 10 July 2025 9:45 PM IST)
t-max-icont-min-icon

சமந்தாவும், ராஜ் திமோரும் காதலிப்பதாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சமந்தா தனிமையில் வாழ்ந்து வந்தார். சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வந்த சமந்தா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாறி சுபம் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.

இந்நிலையில் சமந்தாவும் இயக்குனர் ராஜ்நிதிமோரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக வந்தனர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் அமெரிக்க, தெலுங்கு அமைப்பு சார்பில் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த விழாவில் சமந்தா பங்கேற்று உருக்கமாக பேசினார்.

அவரது பேச்சு வைரலான நிலையில் அமெரிக்க வீதிகளில் சமந்தாவும், ராஜ்நிதி மோருவும் ஒன்றாக நடந்து வருவது, நண்பர்களுடன் உணவகத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

1 More update

Next Story