அஜித்தின் "குட் பேட் அக்லி" பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!


அஜித்தின் குட் பேட் அக்லி பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
x

அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

கடந்த 28-ம் தேதி 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் தற்போது பலரது பார்வைகளை கடந்துவரும்நிலையில், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை 'குட் பேட் அக்லி' படம் படைத்திருக்கிறது. அதன்படி, 35 மில்லியன் பார்வைகளை இது கடந்திருக்கிறது.

உலகளவில் 'குட் பேட் அக்லி' படம் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தனது பட வேலைகளை முடித்து கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடல் குறித்து அஜித் ரசிகருக்கு ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்திருக்கிறார். "படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில். சுட சுட ரெடி பண்ணியிருக்கோம்" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story