ஆலியா பட்டின் “ஆல்பா” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்


ஆலியா பட்டின் “ஆல்பா” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
x
தினத்தந்தி 4 Nov 2025 6:33 PM IST (Updated: 4 Nov 2025 7:11 PM IST)
t-max-icont-min-icon

ஆலியா பட் நடித்து வந்த ‘ஆல்பா’ படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள் . 'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் ஆலியா பட். இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பல்வேறு யுனிவர்ஸ் படங்களை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆண்களை வைத்தே உருவாக்கி வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி புதிய கதாபாத்திரம் ஒன்றை யுனிவர்ஸ் படங்களில் அறிமுகம் செய்கிறது.

‘ஆல்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஷிவ் ராவில் இயக்கி வருகிறார். முதலில் டிசம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், யுனிவர்ஸ் படங்களில் கடைசியாக வெளியான ‘வார் 2’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் ‘ஆல்பா’ படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

தற்போது டிசம்பர் வெளியீடு அல்லாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். இன்னும் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முடிவடையவில்லை என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இதில் அலியா பட் உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

1 More update

Next Story