"என்றைக்கும் விடாமுயற்சி" - வைரலாகும் அனிருத்தின் பதிவு


Always vidamuyarchi Anirudhs post goes viral
x

அடுத்த மாதம் 6-ம் தேதி விடாமுயற்சி படம் வெளியாக உள்ளது.

சென்னை,

அஜித் நடித்து முடித்துள்ள படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான டிரெய்லர் அடுத்த மாதம் 6-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளதை தெரிவித்தது. இந்நிலையில், அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாளும், கதை இன்னும் முடியவில்லை, தொடர்கிறது பாரு, என்றைக்கும் விடாமுயற்சி, நம்பிக்கை விடாமுயற்சி

வானத்தையே கிழித்திவிட்டு இவன் குதித்தாலும், சாவுக்கு பயம் இல்லை வெடிக்கும் போர், என்றைக்கும் விடாமுயற்சி, நம்பிகை விடாமுயற்சி' என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story