பாடலாசிரியர் சினேகனின் தந்தை மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்குவின் மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் சினேகனின் தந்தை மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
Published on

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு அவர்கள் முதுமை காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிவசங்கு அவர்கள் அண்மையில் தான் நூற்றாண்டு விழா கொண்டாடினார். அதற்குள்ளாக அவர் மறைந்திருப்பது கவிஞர் சினேகனுக்கு எவ்வளவு துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன்.

தந்தை சிவசங்கு அவர்களை இழந்து வாடும் கவிஞர் சினேகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com