’படத்துக்கு படம் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்’ - மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்


Bison - Rajinikanth congratulates Mari Selvaraj
x

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழையைத்தொடர்ந்து ‘பைசன்’க்கும் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி இருக்கிறார்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் பைசன் படத்தை பார்த்து மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தி இருக்கிறார்.

இது தொடர்பாக மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில்,

''சூப்பர் மாரி சூப்பர். பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது மாரி. வாழ்த்துக்கள் ‘ - ரஜினிகாந்த்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story