இசைஞானி இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
இசைஞானி இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, இசைஞானி இளையராஜா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com