''ஜனநாயகன்'' படத்தில் புஸ்ஸி ஆனந்த், லோகேஷ்...?- வெளியான சுவாரசிய தகவல்


bussy anand to act in vijays last film jana nayagan
x
தினத்தந்தி 23 Aug 2025 6:12 PM IST (Updated: 23 Aug 2025 6:15 PM IST)
t-max-icont-min-icon

இந்த தகவல் ஜனநாயகன் படத்தின் மீதிருக்கும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சென்னை,

விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் படத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் அவர் போராட்டக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

மேலும், சுவாரசியமாக பிரபல இயக்குனர்களான லோகேஷ் கனராஜ், அட்லீ மற்றும் நெல்சன் ஆகியோரும் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் ரிப்போர்ட்டர்களாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ஜனநாயகன் படத்தின் மீதிருக்கும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

எச்.வினோத் இயக்கி உள்ள ''ஜனநாயகன்'' படத்தில் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story