இந்த தேதியில் வெளியாகும் 'அகண்டா 2' பட டிரெய்லர்?

இந்த திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 3டி முறையில் வெளியாக் உள்ளது.
சென்னை,
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ’அகண்டா 2’ திரைப்பட ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க, எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. போயபதி ஸ்ரீனு இயக்கி உள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 3டி முறையில் வெளியாக உள்ளது.
இது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. விரைவில் படக்குழுவிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். தமன் இசையமைத்துள்ளார்.
Related Tags :
Next Story






