4கே தரத்தில் வெளியானது "கேப்டன் பிரபாகரன்" டிரெய்லர்

4கே தரத்தில் டிஜிட்டல் முறையில் விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெளியாக உள்ளது.
4கே தரத்தில் வெளியானது "கேப்டன் பிரபாகரன்" டிரெய்லர்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.

அந்த வகையில், விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் 'கேப்டன் பிரபாகரன்'. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு 'கேப்டன்' என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வருகிற 22ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது இப்படம் 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், கேப்டன் பிரபாகரன் படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com