'கூலி' டிக்கெட் விலை ரூ. 2,000?...அதிர்ச்சியில் ரசிகர்கள்


Coolie ticket price is Rs. 2,000...fans in shock
x
தினத்தந்தி 10 Aug 2025 11:45 AM IST (Updated: 11 Aug 2025 11:38 AM IST)
t-max-icont-min-icon

கூலி படம் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் முந்தியடித்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.

முன்பதிவு தொடங்கிய அனைத்து மாநிலங்களிலும், ஜெட் வேகத்தில் விற்பனையாகிறது. இந்நிலையில், 'கூலி' டிக்கெட் ரூ. 2,000 விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கில், ஆன்லைன் முன்பதிவிலேயே ரூ. 2,000க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சில இடைத்தரகர்கள் ரூ. 5,000 வரை டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story