நாளை மறுநாள் 'கூலி' ரிலீஸ்... ராமேஸ்வரம் சென்ற லோகேஷ் கனகராஜ்


Coolie to release the day after tomorrow... Lokesh Kanagaraj visits Lord Shiva in Rameswaram
x
தினத்தந்தி 12 Aug 2025 2:41 PM IST (Updated: 12 Aug 2025 2:42 PM IST)
t-max-icont-min-icon

கூலி திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

'கூலி' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story