“பைசன்” திரைப்படத்தை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படம் கடந்த 21ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
“பைசன்” திரைப்படத்தை பாராட்டிய தினேஷ் கார்த்திக்
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள பைசன் படம், ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படம் கடந்த 21ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வந்தனர். இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் 'பைசன்' படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக்  எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பைசன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அருமையான திரைப்படம் மாரி செல்வராஜ். உங்களின் படங்கள் அழுத்தமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்த எதார்த்தமான நடிப்பிற்காக துருவ் கடுமையாக உழைத்துள்ளார். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com