'ஜனநாயகன்' படத்தின் விநியோக உரிமை: விஜய் எடுத்த அதிரடி முடிவு


ஜனநாயகன் படத்தின் விநியோக உரிமை: விஜய் எடுத்த அதிரடி முடிவு
x
தினத்தந்தி 9 Jun 2025 7:55 AM IST (Updated: 12 Jun 2025 8:27 AM IST)
t-max-icont-min-icon

'ஜனநாயகன்' விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதற்கிடையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. மேலும் தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படக்குழு இதர விநியோக உரிமைகள் வியாபாரத்தினை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் விஜய் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு சில நிபந்தனைகளை தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, 'ஜனநாயகன்' விநியோக உரிமையினை கைப்பற்றும் எந்தவொரு நிறுவனத்துக்கும் எந்தவொரு அரசியல் பின்புலமும் இருக்கக் கூடாது என்று விஜய் கூறியிருக்கிறாராம்.

இதற்கு முன் தமிழக வெளியீட்டு உரிமையினைக் கைப்பற்ற முன்னணியில் இருந்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பின்வாங்கி இருக்கிறது. இதனால் தமிழக உரிமையினை லலித்குமாரிடம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் தாணுவிடம் கொடுப்பதற்கும் படக்குழு தயாராக உள்ளதாம். தமிழக உரிமை மட்டுமன்றி இதர மாநில உரிமைகளும் இதே பாணியில் தான் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 More update

Next Story