திடீரென எழுந்த விமர்சனம்... கயாடு லோஹர் விளக்கம்


Dont spread negative things - Kayadu Lohar
x
தினத்தந்தி 5 March 2025 12:59 AM IST (Updated: 5 March 2025 3:15 AM IST)
t-max-icont-min-icon

நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம் என டிராகன் பட கதாநாயகி கயாடு லோஹர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை,

கடந்த 21-ம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், அதில் நடித்த நாயகி கயாடு லோஹரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயடு லோஹர் மாறி உள்ளார்.

டிராகன் படத்தையடுத்து தமிழில் 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கயடு நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் எபபோதும் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களை சொக்க வைக்கும் அளவுக்கு புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே, தனக்கு தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரொமோட் செய்துகொள்வதாக கயாடு லோஹருக்கு எதிராக சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அதற்கு கயாடு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், தன்னை ஆதரித்தவர்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி என்றும், நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம் எனவும் கயாடு குறிப்பிட்டுள்ளார்.


1 More update

Next Story