அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் சந்தித்த பிரபல நடிகர்கள்

அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். கடந்த ஆண்டு, அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தய போட்டிகளில் தனது அணியினருடன் கலந்து கொண்ட அவர் இப்போது, 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
அஜித்தின் ‘ரேஸிங்’ பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.






