உபேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை


உபேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை
x
தினத்தந்தி 11 Aug 2025 9:17 AM IST (Updated: 11 Aug 2025 11:55 AM IST)
t-max-icont-min-icon

உபேந்திரா பிரபல இயக்குனர் அரவிந்த் கவுசிக் இயக்கத்தில் உருவாக 'நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

கன்னட திரையுலகில் இயக்குனர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர் உபேந்திரா. கன்னடத்தையும் தாண்டி தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ரஜினியின் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 14ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், நடிகர் உபேந்திரா பிரபல இயக்குனர் அரவிந்த் கவுசிக் இயக்கத்தில் உருவாகும் நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதனை தருண் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தருண் சிவப்பா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் உபேந்திராவுக்கு ஜோடியாக பல மொழிகளில் நடித்து புகழ் பெற்ற நடிகை மலர்ஸ்ரீயின் மகளான ஆராதனா நடிக்க உள்ளார். இந்த படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story