இளையராஜாவின் 'தட்டுவண்டி' பட பர்ஸ்ட் லுக்


FIRST LOOK of ThattuVandi
x

இளையராஜா தற்போது ‘தட்டுவண்டி’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சென்னை,

1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கியும் உள்ளார்.

சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த இளையராஜா தற்போது 'தட்டுவண்டி' என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை விஜயபாஸ்கர் எழுதி இயக்கி இருக்கிறார்.

சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இளையராஜா வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story