முன்கூட்டியே திரைக்கு வரும் கயாடு லோஹரின் ’பங்கி’...ரசிகர்கள் உற்சாகம்


Funky targets Valentine’s Day 2026 weekend
x
தினத்தந்தி 16 Dec 2025 1:45 AM IST (Updated: 16 Dec 2025 1:45 AM IST)
t-max-icont-min-icon

'பங்கி' படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாக இருந்தது.

சென்னை,

"பங்கி" என்ற புதிய நகைச்சுவைப் படத்திற்காக, நடிகர் விஸ்வக்சென்னுடன் நடிகை கயாடு லோஹர் இணைந்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தில், விஷ்வக்சென் ஒரு திரைப்பட இயக்குனராக ஒரு புதிய வேடத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கயாடு லோஹர் ஒரு நடிகையாக நடிக்கிறார். பீம்ஸ் செசிரோலியோ இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இயக்குனர் கே.வி. அனுதீப் இயக்கும் 'பங்கி' படத்தை கோடை விருந்தாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், படக்குழு சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் பிப்ரவரி 13-ம் தேதியே உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

1 More update

Next Story