ஜி.வி.பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் டீசர் தேதி அறிவிப்பு


ஜி.வி.பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் டீசர் தேதி அறிவிப்பு
x

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள ‘இம்மோர்டல்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மோர்டல்’ படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இரண்டுமே இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘இம்மார்ட்டல்’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில், ‘இம்மோர்டல்’ படத்தின் டீசர் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story