எச்.ராஜா நடித்துள்ள “கந்தன் மலை” படம் யூடியூபில் வெளியீடு

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எச்.ராஜா தற்போது சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
எச்.ராஜா நடித்துள்ள “கந்தன் மலை” படம் யூடியூபில் வெளியீடு
Published on

சென்னை,

தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள எச்.ராஜா தற்போது சினிமா துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது 'கந்தன்மலை' என்ற படத்தில் எச்.ராஜா நடித்துள்ளார். இந்த படத்தை வீர முருகன் இயக்கியுள்ளார். சிவ பிரபாகரன் - சந்திரசேகர் ஆகியேர் படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

கந்தன் மலை என்பது கடவுள் முருகனின் கேவில் இருக்கும் மலையை குறிக்கும். குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றத்தை 'கந்தன் மலை' என்று செல்வார்கள். அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து கந்தன் மலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்

இந்நிலையில், கந்தன் மலை திரைப்படம் தாமரை யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளதாக எச் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com