ஜான்வி கபூர் படத்திற்கு ஷாருக்கான் பாராட்டு

இப்போது இந்த படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
சென்னை,
அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவிலிருந்து ''ஹோம்பவுண்ட்'' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. நீரஜ் கய்வான் இயக்கிய இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் செப்டம்பர் 26 அன்று திரையரங்குகளில் வெளியானது. அதில் கலவையான விமர்சனக்களையே இப்படம் பெற்றது. திரையரங்குகளில் வெளியாகும் முன், இது கேள்ஸ் திரைப்பட விழா மற்றும் பொராண்டோ சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தை ஷாருக்கான் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், “ ''ஹோம்பவுண்ட்'' திரைப்படம் மென்மையானதும், நேர்மையானதும், ஆழமான உணர்வுகளால் நிரம்பியதுமாக உள்ளது. இவ்வளவு மனிதநேயமும் ஈர்ப்பும் நிறைந்த படைப்பை உருவாக்கிய படக்குழுவுக்கு அளவற்ற அன்பும் மனமார்ந்த வாழ்த்துகளும். நீங்கள் உண்மையிலேயே தனித்துவமான ஒரு படைப்பை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறீர்கள் ”இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இப்போது இந்த படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.






