ஹனிரோஸின் “ரேச்சல்” ரிலீஸ் ஒத்திவைப்பு

சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக ‘ரேச்சல்’ ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹனி ரோஸ். தற்போது மலையாளத்தில் உருவாகி உள்ள ‘ரேச்சல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கறி வெட்டும் தொழிலாளியாக படத்தில் நடித்துள்ள ஹனிரோஸ் தோற்றம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனந்தினி பாலா இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில், ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ரோஷன் பஷீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பரில் திரைக்கு வெளியாவதாக இருந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில் ‘ரேச்சல்’ என்ற படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைத்துள்ளது. இதுபற்றி படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், “சரியான நேரம் மற்றும் ஒட்டுமொத்த ரிலீஸ் சூழலைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதிசெய்வதற்காக ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.






