நடிகர் தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது


நடிகர் தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது
x

படுக்கையில் இருந்த தர்மேந்திராவை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து அதை வைரல் ஆக்கினர்.

மும்பை,

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் நடிகர் தர்மேந்திரா (வயது 89). இவர் கடந்த 1960ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் என்பதை கடந்து அரசியல்வாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை மோசமானதால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் கடந்த 12ந் தேதி தர்மேந்திரா வீடு திரும்பினார்.

இந்நிலையில் தர்மேந்திராவின் வீடியோ வைரலானது. மருத்துவமனையில் படுக்கையில் இருந்த தர்மேந்திராவை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து அதை வைரல் ஆக்கினர். மயக்கம் அடைந்த நிலையில் வெளியான தர்மேந்திரா வீடியோ அவரது குடும்பத்தினரை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் தர்மேந்திராவை படம் பிடித்த மருத்துவமனை ஊழியர்களை கைது செய்துள்ளனர்.

1 More update

Next Story