நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை


நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை
x

தனது புகைப்படத்தை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத் ஐகோர்ட்டில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஐதராபாத்,

ஐதராபாத் நீதிமன்றத்தில், நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்த வழக்கில், தன்னுடைய அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப்பூர்வமற்றவர்கள், வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்த வழக்கில் ஐதராபாத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. வணிக லாபத்திற்காக சிரஞ்சீவி பெயர், ஏஐ புகைப்படங்கள் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முன்னதாக இதேபோல், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சான் தொடந்த வழக்கிலும் இதே தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story