"ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு" - கயாடு லோஹர்


ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு -  கயாடு லோஹர்
x
தினத்தந்தி 4 May 2025 6:11 PM IST (Updated: 4 May 2025 6:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கயாடு லோஹர் கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்றார்.

சென்னை,

பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக 'டிராகன்' படத்தில் நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர், அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார். சிம்பு ஜோடியாக எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார்.

குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கயாடு லோஹர் சென்னை கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நான் கல்லூரியில் சராசரியான மாணவி தான். ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன் என்றார்.

அதனை தொடர்ந்து, இந்த கல்லூரியில் உள்ள மாணவர்கள் எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எல்லாவற்றையும் பார்க்கும்போது நான் ரொம்ப நன்றி உணர்வுடன் இருக்கிறேன் என்றார். மேலும், நீங்கள் காதலில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "நான் எல்லாம் அப்படி இல்லை. ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு. எந்த காதல் விவகாரங்களும் எனக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story