உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ் - லோகேஷ் கனகராஜ் உருக்கம்


உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ் - லோகேஷ் கனகராஜ் உருக்கம்
x

நீங்கள் இயக்குநர்களாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர்கள் அன்பறிவ். இப்படங்களின் சண்டைக் காட்சிகள் மிகவும் பிரபலம். தற்போது அன்பறிவுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

அப்பதிவில் “எனது இயக்குநர் வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து இன்று வரை எனக்கு தூண்களாக இருப்பவர்கள் அன்பறிவ். அவர்களை பற்றி கூறுவது இதுவே சரியான தருணம். நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னை பார்க்க அவர்கள் முதலில் இருந்தே விரும்பினார்கள். என் வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்களுக்கு எப்போதும் ஒரு பெரிய பங்கு உண்டு. அதற்காக உங்கள் இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், நீங்கள் இயக்குநர்களாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன். உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story