'யாஷ் படத்தை தயாரிக்கமாட்டேன்' - கவனம் ஈர்க்கும் தயாரிப்பாளரின் பேச்சு

நடிகர் யாஷின் அம்மா புஷ்பா அருண்குமார், தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.
சென்னை,
'கேஜிஎப்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் கன்னடம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமானவர் யாஷ். தற்போது இவர், 'டாக்சிக்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், யாஷ் படத்தை தயாரிக்கவே மாட்டேன் என்று அறிமுக தயாரிப்பாளர் ஒருவர் கூறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது வேறு யாரும் இல்லை, நடிகர் யாஷின் ஆம்மாதான்.
யாஷின் அம்மா புஷ்பா அருண்குமார், பிஏ புரொடக்சன்ஸின் கீழ் 'கொத்தலாவடி' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அவரிடம், மகன் யாஷ் படத்தை தயாரிக்கும் திட்டம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் இல்லை என்றார்.
அவர் கூறுகையில், 'யாஷுக்கு ஏற்கனவே நிறைய பணமும் புகழும் உள்ளது, எனவே நான் மற்றவர்களின் படங்களை தயாரிப்பேன். ஏற்கனவே உணவு வைத்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறுவது சரியல்ல" என்றார்.






