இளையராஜாவின் அடுத்த படம்


Ilayarajas next film
x

இளையராஜா இசையமைக்கும் அடுத்த படத்திற்கு 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

1976-ம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கியும் உள்ளார்.

சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், இளையராஜா இசையமைக்கும் அடுத்த படத்திற்கு 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' எனப்பெயரிடப்பட்டுள்ளது.

தனபால் பத்மநாபன் இயக்கும் இப்படத்தில் நாசர் முக்கிய கதாபாத்திரத்தி நடிக்கிறார். இது மட்டுமில்லாமல் 'தட்டுவண்டி' என்ற படத்திற்கும் இளையராஜா இசையமைத்து வருகிறார். விஜயபாஸ்கர் எழுதி இயக்கும் இப்படத்தை சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு தயாரிக்கிறார்.

1 More update

Next Story