சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா?


Is Nayanthara set to play Chiranjeevi’s romantic interest in Anil Ravipudi’s next?
x
தினத்தந்தி 27 April 2025 9:17 PM IST (Updated: 30 April 2025 6:31 AM IST)
t-max-icont-min-icon

சிரஞ்சீவியின் 157-வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார்.

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்தது. .

இப்படத்தையடுத்து அனில் ரவிபுடி, சிரஞ்சீவியின் 157-வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஷைன் ஸ்கிரீன்ஸ் பேனரின் கீழ் சாஹு கரபதி தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் ரூ. 18 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது உண்மையாகும் பட்சத்தில் 'சைரா நரசிம்ம ரெட்டி' மற்றும் 'காட்பாதர்' ஆகிய படங்களுக்கு பிறகு, நயன்தாரா சிரஞ்சீவியுடன் இணையும் 3-வது படமாக இது அமையும்.

1 More update

Next Story