வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா? அதர்வா விளக்கம்


வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தால் பாதிப்பா? அதர்வா விளக்கம்
x

‘இதயம்’ முரளியின் மகனான அதர்வா தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

நடிகர் அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் நடித்த 'டிஎன்ஏ' படம் நல்ல வரவேற்பை பெற்றது சுதா கொங்கரா இயக்கி வரும் 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வா, கயாடு லோஹர் நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் அதர்வாவின் அப்பாவான முரளி ‘இதயம்’ படத்தில் நடித்து பிரபலமானார். முரளிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைப்போல் அதர்வாவிற்கும் ‘இதயம் முரளி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வாவிடம் 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில் “விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது. என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கென உத்வேகத்தை தந்தது. அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை” என்றார்.

1 More update

Next Story