சிம்புவுடனான படம் கைவிடப்பட்டதா? - ஓபனாக சொன்ன வெற்றிமாறன்


Is the film with simbu be a Drop? - vetrimaaran said openly
x
தினத்தந்தி 10 Aug 2025 1:30 PM IST (Updated: 10 Aug 2025 1:30 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை 2 படத்திற்கு பிறகு சிம்புவோடு இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார் வெற்றிமாறன்.

சென்னை,

சிம்பு உடனான படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

''வாடிவாசல்'' படம் தள்ளிபோய் கொண்டே செல்ல, விடுதலை 2 படத்திற்கு பிறகு சிம்புவோடு இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார் வெற்றிமாறன்.

இதற்காக சமீபத்த்தில் புரோமோ படப்பிடிப்பு நடந்தது. ஆனால், கொஞ்சம் இடைவெளி ஏற்பட, படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்தி பரவியது.

இதுகுறித்து எந்த தகவலும் வராமல் இருந்தநிலையில், தனியார் டிவியில் பேட்டி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன், படத்தின் அறிவிப்பு புரோமோ விரைவில் வரபோவதாக சொல்லி இருக்கிறார். மேலும், படப்பிடிப்பும் உடனடியாக ஆரம்பிக்க போவதாவும் அப்டேட் கொடுத்திருக்கிறார்

1 More update

Next Story