2026 குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாறுகிறதா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்


2026 குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாறுகிறதா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2025 12:03 PM IST (Updated: 22 Dec 2025 12:06 PM IST)
t-max-icont-min-icon

குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சென்னை,

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிரப்பி வருகிறது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும், அடுத்த நடைபெறும் தேர்வுகள் குறித்த கால அட்டவணை வெளியிடப்படும். அந்த வகையில் 2026 க்கான ஆண்டு அட்டவணை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியானது.

இதன்படி, தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தேர்வகள் தற்போதே தயாராகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது. அதாவது, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:- 2026-ல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகள், டிசம்பர் 2024-ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். பாடத்திட்டம் மீண்டும் மாற்றப்படும் என வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story